nutrition
ஊட்டச்சத்து / ஊட்டநிலை / போசணை / போசாக்கு
தமிழ் விளக்கம்
ஊட்டச்சத்து என்பது மனிதன் வளரவும், செயல்படவும் ஆரோக்கியமாக வாழவும், அத்தியாவசிய மூலப்பொருள்களை உயிரணுக்களுக்கும், அதன்மூலம் உயிரினங்களுக்கும் வழங்குவதாகும். இது மனிதர்கள் உண்ணும் உணவுகளான தானியங்கள், பருப்புவகைகள், மற்றும் எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் பால்பொருட்கள், மாமிச உணவுகள் (மீன், இறைச்சி மற்றும் கோழி) முதலியவற்றிலிருந்து கிடைக்கிறது. ஊட்டச்சத்து பல ஊட்டக்கூறுகளைக் (Nutrients) கொண்டிருக்கும். (எ.கா கார்போஹைரேட்டுக்கள், புரதங்கள், கொழுப்புக்கள், தாதுக்கள், உயிர்ச்சத்துக்கள், மற்றும் நீர்). பொதுவான சுகாதார பிரச்சினைகளையும், ஆரோக்கியக்கேட்டையும் சத்துள்ள உணவைக் கொண்டு தடுக்கவோ தவிர்த்துவிடவோ முடியும். ஊட்டநிலை (Nutrition), ஊட்டக்கூறு (Nutrient) இரண்டுமே ஊட்டச்சத்து என அழைக்கப்படுவதுண்டு. போதுமான ஊட்டக்கூறுகள் இல்லாத உணவுமுறை ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் என்பதோடு, சோகை, ஊட்டச்சத்து குறைவு மற்றும் குவாஷியோர்கர் போன்ற குறைபாட்டு நோய்களுக்கும்; உடல் பருமன் மற்றும் வளர்ச்சிதை குறைபாடு மற்றும் நாள்பட்ட படிப்படியாக ஏற்படும் நோய்களான இதயத்தமணி நோய், நீரிழிவு நோய் மற்றும் எலும்புகள் வலுவிழத்தல் (ஆஸ்டியோபோரோஸிஸ்) போன்ற உடல்நலனுக்கும், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்களுக்கும் காரணமாக அமைகிறது. ஊட்டச்சத்து குறைபாடு என்பது பற்றாக்குறையான, மிதமி்ஞ்சிய அல்லது சமநிலையற்ற ஊட்டச்சத்து நுகர்வைக் குறிக்கிறது. வளர்ந்த நாடுகளில், ஊட்டச்சத்து குறைபாடு நோய்கள், ஊட்டச்சத்து சமனின்மை அல்லது மிதமிஞ்சிய நுகர்வினுடனே தொடர்புடையதாக இருக்கிறது. பற்றாக்குறை உணவால் மட்டுமல்ல, மிதமிஞ்சிய நுகர்வின் காரணமாக உலகிலுள்ள நிறையபேர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்கிறார்கள் என்றாலும், உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி இன்று வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள உண்மையான சவால், பட்டினியைக் காட்டிலும், ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் போராடுவதாகவே இருக்கிறது என்று தெரிவிக்கின்றது.
English
The process by which living organisms assimilate materials that are necessary for sustenance, energy, and growth. Human nutrition involves the use of food substances (nutrients) that include the proper balance of proteins, carbohydrates, and fats, as well as vitamins, minerals, and water. Good human nutrition requires a well-balanced diet containing an adequate but not excessive amount of food and calories. Failure to achieve this balance can result in various diseases, dysfunctions, deficiencies, or death. See also malnutrition.