nyctalopia

இரவுக் குருடு, இருள்பார்வைக் குறை, நிசிக் குருடு, மாலைக்கண் நோய், இராக் குருடு

தமிழ் விளக்கம்

மாலைக்கண் நோய் உள்ளவர்களுக்குப் பிரகாசமான வெளிச்சம் இருந்தால் மட்டுமே பார்வை தெளிவாக இருக்கும். சூரியன் மறைந்த்தும் பார்வை மங்கலாகி .விடும். சூரிய ஒளி இல்லாத குறைந்த வெளிச்சத்தில் ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்ளும் விழித்திரையில் ராட்ஸ் செல்கள் மிகவும் குறைவாக இருந்தாலோ அதில் குறைபாடு ஏற்பட்டாலோ சூரியன் மறைந்த உடனேயே அவர்களுடைய பார்வை மங்கிப் போய்விடுகிறது. இந்த மாலைக்கண் நோய் ஏற்படுவதற்குக் காரணம் வைட்டமின் ‘ஏ’ பற்றாக்குறையும், ரெட்டினைட்டிஸ் பிக்மென்டோஸா என்ற நோயும் காரணமாகச் சொல்லப்படுகிறது. மனித உறுப்புகளுக்கு வைட்டமின் - ஏ என்பது ஒரு முக்கிய சத்துப் பொருளாகும். இந்த வைட்டமின் - ஏ விலங்குகளில் ரெட்டினாலகாவும், தாவரங்களில் கரோட்டினாகவும் காணப்படுகிறது. தாவரங்களில் காணப்படும் கரோட்டினை உணவு வழியாக உட்கொள்ளும் பொழுது, அது குடலில் சென்று ரெட்டினாலாக மாறுகிறது. ரெட்டினால் என்ற வைட்டமின் - ஏ ரொடோப்ஸின் என்ற வர்ணப் பொருளை உற்பத்தி செய்து, இரவு நேரத்தில் கண்பார்வை தெரிய வழி வகுக்கிறது. ரொடோப்ஸினில் ஏற்படும் இராசாயன மாறுதல்களின் உதவியுடன், விழித்திரையில் விழும் காட்சிகள் நரம்பு மூலமாக மூளையைச் சென்று அடைகிறது. ஆகையால் வைட்டமின் - ஏ நிறைந்துள்ள பால், கீரை, பப்பாளி, கேரட், மீன், மூட்டை, பழங்கள் உண்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்களை தவிர்க்கலாம்.

English

The inability to see well in dim light or at night. In some people this is caused by a deficiency in vitamin A.