obesity

மிகவும் குண்டாக இருத்தல், ஊழைச்சதை, கொழுப்புச்சதை, தொந்தி, மட்டுமீறிய தூலிப்பு, உடற்பருமன், பருத்த தன்மை, பருமனான சரீரம்

தமிழ் விளக்கம்

உடல் பருமன் அல்லது அதிக உடல் எடை என்பது ஆரோக்கியத்தைப் பாதிக்குமளவு ஒருவரின் உடலில் மிதமிஞ்சிய கொழுப்பு சேர்தலைக் குறிக்கும். உடல் எடை குறித்த பிரச்சினைகளை அளவிடுவதற்கான, ஒருவருடைய உயரத்தின் அடிப்படையில் ஆரோக்கியமான உடல் எடையை மதிப்பிடுவதற்கு, உடல் நிறை குறியீட்டெண் (Body Mass Index (BMI), பிஎம்ஐ) என்ற சூத்திரம் பயன்படுகிறது. இதன்படி உடல் நிறை குறியீட்டெண் 30 க்கும் அதிகமாக உள்ளவர்கள் உடல் பருமனானவர்கள் என்றும், 25-30 குறியீட்டெண் கொண்டவர்கள் அதிக எடை கொண்டவர்களாகவும் கருதப்படுகிறார்கள். உடல்பருமன் பலர் நினைப்பது மாதிரி தோற்றப்பொலிவோடு மட்டும் சம்மந்தப்பட்ட பிரச்சனை அல்ல. அது நீரழிவு, இதய நோய்கள், மற்றும் புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வல்லது. உடல்பருமன் என்பது பணக்கார நாடுகளின் பிரச்சனை என்ற நிலை மாறி, ஏழைநாடுகளிலும் பிரச்சனையாகி வருகிறது. நகர வாழ்க்கை, உடலுழைப்பு இல்லாதது, அதிக கலோரிகளும், கொழுப்பும் கொண்ட துரித உணவுகள், மதுப்பழக்கம் போன்ற வாழ்வியல் மாற்றங்களாலும் உடல் எடை அதிகரிக்கின்றது.

English

An excessive accumulation of fat in the body, caused by the consumption of too much food, too little exercise, or glandular disorders. Obesity is determined not by a person's height-weight ratio or subjective appearance but by the percentage of fat in body tissue.