object permanence
ஒரு பொருளைப் பார்த்தோ, தொட்டுணர்ந்தோ, கேட்டோ, முகர்ந்தோ அறியமுடியாவிட்டாலும் அப்பொருள் மறைவாகத் தன்னருகிலே இருப்பதாக குழந்தைகள் உணரும் அறிதிறன் வளர்ச்சி
தமிழ் விளக்கம்
இது ஜீன் பியாஜியே (Jean Piaget 1896 - 1980) விளக்கிய அறிதிறன் மேம்பாடு வளர்ச்சியின் ஒரு நிலை. குழந்தைகளுக்குத் தொட்டுணர்வதால் ஏற்படும் அறிவு வளர்ச்சிப் பருவம் அல்லது புலன் இயக்கச் சிந்தனை வளர்ச்சி நிலையில் (sensorimotor stage), பல்வேறு பொருட்களை / தன்னைச் சுற்றியுள்ள உலகை மொழி உதவியின்றி புலன்களின் வழியேயும், உடலியக்கங்கள் வழியும் அறிந்து கொள்ளும் திறன். இது ஒரு வகையான கண்ணாம் பொத்தி ஆட்டம்.
English
The understanding that something exists independently of oneself and continues to exist even when it can no longer be seen or otherwise perceived.