object relations theory

மனபிம்பங்கள் / மனப் பதிவுகள் / மன அடையாளங்களின் அடிப்படையில் உருவாகும் உறவு பற்றிய கோட்பாடு

தமிழ் விளக்கம்

உளப் பகுப்பாய்வு கோட்பாட்டிலிருந்து உருவான இந்த உளவியல் கோட்பாட்டில், 'object' என்பது குழந்தைப் பருவத்தில், குறிப்பாக குழந்தைகளுடன் நெருக்கமாக இருக்கின்ற தாய் அல்லது பரமரிப்பாளர், அக்குழந்தையைக் கையாளும் முறைகளிருந்து அக்குழந்தைகளின் மனதில் படிந்த ஆழ்மன பதிவுகளை / நிகழ்ச்சிகளைக் குறிக்கும். object என்பதை மனப்பதிவுகள் அல்லது மன அடையாளங்கள் எனலாம். இந்த மனப் பதிவுகளே ஒருவர் வளர்ந்த பின்பும், அவரின் மனதில் படிந்த பிம்பங்கள்/ பதிவுகள் / அடையாளங்களே அவருக்கும் பிறருடனான அவரின் உறவுகளையும் தீர்மானிக்கின்றது. சுருங்கச் சொன்னால் மனிதர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் மனிதர்களுடன் கொள்ளும் உறவின் தன்மை, அவர் குழந்தைப்பருவத்தில் ஆழ்மனதில் பதிந்துகொண்ட பிம்பங்களின் அடிப்படையிலே அமைகின்றது என்ற கருத்தாக்கம்.

English

A psychoanalytic concept about an individual's relationship with others based on early parent-child interactions and internalized self-images that are focused on these interactions. The neo Freudian view is that libido and aggressive drives toward self-pleasure are no more important than are the child's object-seeking drives.