objective test
தற்சார்பற்ற / பாரபட்சமற்ற / தன்னுணர்வுகளுக்கு இடங்கொடாத தேர்வு முறை
தமிழ் விளக்கம்
ஆய்வாளரின் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராத / தற்சாபற்ற / பாரபட்சமற்ற / தன்னுணர்வுகளுக்கு இடங்கொடாத வகையில் தகவல்களைச் சேகரிக்கவும், மதிப்பீடு செய்யவும் உபயோகப்படுத்தப்படுகின்ற தேர்வு முறை. இந்த முறையில் ஒரு கேள்விக்கு, விவரணை (கட்டுரை) முறையில் பதிலளிக்க வாய்ப்பளிக்காமல், பொருத்தமான பலவிடைகள் கொடுக்கப்பட்டு, அதில் மிகப்பொருத்தமான ஒரு விடையைத் தேர்வு செய்ய வாய்ப்பளிக்கும் முறை. இந்த முறையில் தேர்வு எழுதுபவர்கள் தங்களின் தன்னுணர்வு (subjective) சார்ந்து பதிலளிக்க வாய்ப்பில்லை. மதிப்பீடு செய்பவர்களும் தங்களின் தன்னுணர்வு சார்ந்து விடைகளை / பதில்களைத் தேர்வு செய்யவும் வாய்ப்பில்லை.
English
A data-gathering instrument or examining device whose scores do not depend on the examiner's judgment, for example, a multiple-choice exam rather than an essay exam.