objective tree

நோக்கம் / இலக்கு / குறிக்கோள் விருட்சம், மரம், நோக்கத்தின் கிளையமைப்புரு

தமிழ் விளக்கம்

சமுதாய அமைப்பாளர்களாலும், சமூகக் கொள்கை வடிவமைப்பாளர்களாலும் தாங்கள் அடைய விரும்பும் குறிக்கோள்களை / இலக்குகளை முன்னுரிமையின் அடிப்படையில் ஏறு வரிசையாகவோ, இறங்கு வரிசையாகவோ (மரக்)கிளையமைப்புருவில் படமாக விளக்கும் முறை. இந்த முறையில் ஒரு நிறுவனம் அடைய விரும்பும் குறிக்கோளை மேலாகவும், துணைக் குறிக்கோள்களை முன்னுரிமையின் அடிப்படையில் அதற்கடுத்தபடியாகக் கீழிருந்து மர வடிவிலோ அல்லது மேலிருந்து கீழாகத் தலைகீழ் வடிவிலோ குறிப்பார்கள்.

English

A technique in social policy analysis for graphically delineating the various goals of an organization and priorities to be used in their fulfillment. The administrator creates a box at the top of a page with the primary objective of the organization and below that lists in descending order the lesser objectives. The resulting diagram shows an inverted treelike figure that outlines serially the goals and their relative importance, permitting the administrator to establish the dates by which each objective is to be reached.