obsessive-compulsive disorder
ஆட்டிப்படைப்பு, பித்துத்துவம், மனது அலைக்கழிக்கப்படும் கோளாறு, ஒன்றல்
தமிழ் விளக்கம்
உந்தல் கோளாறு - மனதிலிருந்து அகற்றமுடியாத, தேவையற்ற, தொடர்ந்து உருவாகும், மனதை அலைக்கழிக்கும் எண்ணங்களால் ஏற்படும் விசனம், மனக்கலக்கம், பயம், மற்றும் கவலையையும், அதைக் குறைக்கத் திரும்பத் திரும்ப செய்யும் சடங்கு போன்ற செயல்களையும் மனதை அலைக்கழிக்கும் சீர்கேடு எனச் சொல்லலாம். கைகளையோ துணியையோ திரும்பத் திரும்பச் சுத்தம் செய்தல், ஒன்றைச் சரியாகச் செய்தோமா என்று சந்தேகப்பட்டு மீண்டும் மீண்டும் சோதித்தறிதல், யார் பார்வையிலும் படாதவாறு சிலவற்றை மறைத்து வைத்தால், அலைக்கழிக்கும் காம இச்சைகள், ஆவேச உணர்வு, பக்தி உணர்வு, உறவுகள் தொடர்பான பதட்டம், சில எண்களின் மீது ஏற்படும் வெறுப்பு, கதவைத் திறக்கும் போதும், மூடும் போதும் ஏற்படும் பதட்ட உணர்வு போன்றவை இதன் அறிகுறிகளாகும். இந்த அலைக்கழிப்பு காலவிரயத்தை உண்டாக்கி, மற்றவர்களுடனான உறவைச் சீர்குழைத்து, உணர்வு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இழப்புகளை ஏற்படுத்தும். இவ்வாறு அலைக்கழிக்கப்படுபவர்களுக்கு, தாங்கள் அலைக்கழிக்கப்படுகிறோம் என்ற பிரக்ஞை இருப்பது தெரிவதால், அந்த பிரக்ஞையே அவர்களை மேலும் சோர்வடையச் செய்துவிடும். இந்த அலைக்கழிப்பு அறிவுக்குப் பொருத்தமற்றதாக உணரப்பட்டாலும், பொதுவாகச் சராசரி அறிவுத்திறனிற்கு மேம்பட்டவர்களே இந்தச் சீர்கேட்டினால் அதிகம் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
English
A type of anxiety disorder in which the individual experiences unwanted, recurrent, and persistent ideas, impulses, or images (an obsession) or engages in seemingly intentional behaviors that are performed ritualistically (a compulsion) as a reaction to conflict or other sources of anxiety. Obsessive-compulsive disorder is to be distinguished from obsessive-compulsive personality disorder.