obsessive-compulsive personality disorder

மிகைப் பற்று மனச்சிக்கல், தன் விருப்பத்திற்கு மாறாகச் செயல்படும் ஆளுமைச் சீர்கேடு.

தமிழ் விளக்கம்

மிகைப் பற்று மனச்சிக்கல் / உந்தல் ஆளுமைச் சீர்கேடு - எதையும் செம்மையாக, பூரணத்துவமிக்கதாக செய்ய வேண்டுமென்ற பதட்டத்தின் அடிப்படையில், தான் சொல்கிறபடியே காரியமாற்றப்பட வேண்டுமென்ற பிடிவாதக் குணமும், உணர்வுகளை இதமாகவோ, இளகிய தன்மையுடனோ வெளிப்படுத்த இயலாமையும், அற்பமான நடைமுறைகள் மற்றும் விதிகளை அப்படியே பின்பற்ற முயல்தலும், கஞ்சத்தனமும், சம்பிரதாயமான உறவுமுறைகளைக் கடைப்பிடிப்பதும், எதையும் முன்னுரிமைப்படுத்தித் தீர்மானிக்க இயலாமையையும் அறிகுறிகளாகக் கொண்ட தன் விருப்பத்திற்கு மாறாகச் செயல்படும் ஆளுமைச் சீர்கேடு. இந்தச் சீர்கேட்டில் திரும்பத் திரும்ப செய்யப்படும் செயல்கள், ஒரு செயலைச் செம்மையாகச் செய்யவேண்டுமென்ற பதட்டதின்படி செய்யப்படுவதாகையால், இது மனதை அலைக்கழிக்கும் சீர்கேட்டிலிருந்து (obsessive-compulsive disorder) மாறுபட்டது. மனதை அலைக்கழிக்கும் சீர்கேட்டில் திரும்பத் திரும்ப செய்யப்படும் காரியங்கள், செம்மையை அடையவேண்டி செய்யப்படும் காரியங்களல்ல. மாறாக அது மனப் பதட்டத்தைத் தவிர்க்கச் செய்யப்படும் காரியங்கள்.

English

One of the personality disorders that is characterized by perfectionistic behavior, insistence on having others submit to a certain way of doing things, limited ability to express warm feelings or tenderness, preoccupation with trivial details and rules, stinginess, stiff formality in relationships, and poor ability to prioritize and make decisions. This disorder is also known as compulsive personality disorder. It is to be distinguished from the anxiety disorder known as obsessive-compulsive disorder in that the perfectionistic behaviors are not responses to or attempts to overcome anxiety.