obstruction of justice
நீதி வழங்குவதைத் தடுத்தல், நீதி வழங்குவதில் முட்டுக்கட்டையிடல்
தமிழ் விளக்கம்
ஒரு குற்றத்தைக் கண்டுபிடிக்கச் செய்யப்படும் புலன் விசாரணையைத் தடுத்து, திசைதிருப்பி, குற்றத்தை, குற்றவாளிகளை மறைத்து, தண்டனையிலிருந்து தப்பிக்க வைக்க செய்யப்படும் முயற்சிகளை நீதி பரிபாலனத்தில் முட்டுக்கட்டையிடுதல் எனப்படும். புலன்விசாரணையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு மற்றும் நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுத்தல், அவர்களையும் சாட்சியங்களையும் மிரட்டுதல், அவர்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபடுதல், ஆதாரங்களை அழித்தல் போன்ற செயல்கள் நீதிவழங்குவதில் முட்டுக்கட்டையிடும் செயல்களாகக் கருதப்படுகின்றது.
English
The crime of preventing or attempting to prevent officers of the law and court from accomplishing their duties. Specific activities include attempting to bribe or intimidate jurors, witnesses, or officers of the court; interfering with police when they are in pursuit of a criminal suspect; and concealing or destroying evidence.