occupational hazard

பணிசார் இன்னல்கள் / விபத்து / காயம் / இழப்பு, தொழில் சார் இன்னல்கள் நோய்கள்

தமிழ் விளக்கம்

ஒரு பணியோடு / வேலையோடு தொடர்புடைய இன்னல்கள் / இடர்ப்பாடுகள்/ அபாயங்கள். இது பணியிடத்தில் ஏற்படும் விபத்தாகவோ, அந்தப் பணியில் ஈடுபடுவதால் ஏற்படும் நோயாகவோ இருக்கலாம். இது இயந்திரங்களின் பழுதாலோ, உபயோகப்படுத்தும் பொருட்களாலோ அல்லது மனிதர்களின் கவனக்குறைவாலோ ஏற்படலாம். மன அமைதியிழந்த வாடிக்கையாளர்கள் மற்றும் அவருடன் வருபவர்கள், தாங்கள் எதிர்பார்க்கும் உதவிகளோ, நிவாரணமோ கிடைக்காத போது, சமூகப்பணியாளர்களிடம் ஆத்திரம் கொள்வதும், வன்முறையில் ஈடுபடுவதும் சமூகப்பணித் தொழிலில் உள்ள இன்னல்கள்.

English

A danger directly associated with one's job. For example, an occupational hazard for some social workers is the risk of violent attack by disturbed clients or by interested third parties, such as the client's spouse.