occupational social work
தொழில்சார் சமூகப்பணி
தமிழ் விளக்கம்
பணியிடத்திலும், பணியிடத்திற்கு வெளியேயும் பணியாளர்களின் பணித்திறனைப் பாதிக்கும் உடல் மற்றும் மனநலப் பிரச்சனைகள், பணியிட உறவுகள், பணியின் மீதான கவனத்தைத் திசைதிருப்பும் குடும்ப நிகழ்வுகள் / பொறுப்புகள், பணியாளர்களின் நிதி நிலைமை மற்றும் பல பிரச்சனைகளில் பணியாளர்களுக்கு ஆலோசனை சொல்லவும், அதைத் தீர்க்கவும் தொழிற்சாலை முதலாளிகள் மூலமாகவோ, தொழிற் சங்கங்கள் மூலமாகவோ அல்லது இருவரும் இணைந்தோ, சமூகப்பணியாளர் மூலம் செய்யும் சேவை. இதை முதலாளிகள் செய்யும் பட்சம் அது பணியாளர் உதவித் திட்டங்கள் (employee assistance programs (EAPs) என்றும், தொழிற்சங்கங்கள் செய்யும் பட்சம் அது உறுப்பினர் உதவித் திட்டங்கள் (member assistance programs (MAPS) என்றும் அழைக்கப்படுகிறது. தொழில்சார் சமூகப்பணியாளர், சில நேரங்களில் தொழிலாளர் சார்பாக தொழிலக நிர்வாகத்தில் தலையிடுவதும் உண்டென்றாலும், இது பெரும்பாலும் தனியாளர் சமூகப்பணி (Case work) அல்லது பிணிசார்ந்த (clinical social work) சமூகப்பணியாகவே நடைமுறையில் உள்ளது.
English
The provision of professional human services in the workplace through such employerfunded programs as employee assistance programs (EAPs) and occupational alcoholism programs, as well as labor union-funded programs such as the member assistance programs (MAPS). The goal is to help employees meet their human and social needs by providing services (including marital therapy and family therapy) and dealing with emotional problems, social relationship conflicts, and other personal problems. Occupational social work can be involved in macro practice (such as organizational interventions on behalf of employee groups) as well as individual clinical activities. Many social workers use the term synonymously with industrial social work.