Oettinger, Katherine (1903-1997)

ஒட்டிங்கர் கேதரின் பிரௌன்வெல் (1903-1997)

தமிழ் விளக்கம்

ஒட்டிங்கர் கேதரின் பிரௌன்வெல் (1903-1997) - அமெரிக்கக் குழந்தைகள் வாரியத்தில் (U.S. Children's Bureau) நீண்ட காலம் தலைமைப் பொறுப்பிலும், பின்னர் அமெரிக்க அரசின் சுகாதாரம், கல்வி மற்றும் சமூகநலத்துறையில் செயலராகவும் பணியாற்றிய ஒட்டிங்கர் கேதரின் பிரௌன்வெல் (1903-1997) அடிப்படையில் சமூகப்பணிக் கல்வி கற்றவர். தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். பாஸ்டன் பல்கழைக்கழகத்தின் சமூகப் பணித் துறையின் டீன் ஆகப் பணியாற்றியவர். சமூகப்பணி தொடர்புடைய பல புத்தகங்களை எழுதியவர். அமெரிக்காவில் மட்டுமல்ல பல்வேறு நாடுகளில் சமூகப்பணிக் கல்வி வளர முயற்சிகள் எடுத்தவர்.

English

Longtime chief of the U.S. Children's Bureau followed by service as deputy secretary of the U.S. Department of Health, Education and Welfare (DHEW) for family planning and population. She was also a founder of the National Association of Social Workers (NASW) and dean of the Boston University School of Social Work. A prolific author of family policy texts, she was also active in developing social work education programs internationally.