offender registration

குற்றவாளிகள் பதிவு

தமிழ் விளக்கம்

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களையும், தண்டனை பெற்றவர்களையும் ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும் கண்காணிக்க உதவும் பதிவு முறை. பொதுவான குற்றங்கள், பாலியல் குற்றங்கள், போதை மருந்து தொடர்பான குற்றங்கள் போன்றவற்றில் ஈடுபடும் குற்றவாளிகள், தண்டனை முடிந்த பிறகு எங்கு தங்கியிருக்கின்றார்கள் என்பதைக் கண்காணிக்க இந்தப் பதிவு முறை உதவுகிறது. அமெரிக்கக் குற்றவியல் நடைமுறைச் சட்டம், சிலவகைக் குற்றங்களில் ஈடுபடுபவர்களைப் பற்றிய தகவல்களை அவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புப் பகுதிகளிலுள்ள மக்களுக்கு சுவரொட்டிகள் மூலமாகவோ, இணைய தளத்தின் மூலமாகவோ, உள்ளூர் காவல் நிலையத்தின் மூலமாகவோ தெரியப்படுத்தி மக்களை எச்சரிக்க வேண்டும் என்று கூறுகிறது.

English

A legal requirement in many jurisdictions in the United States that requires people convicted of crimes, most often child molestation and rape, to notify the local law enforcement authorities of their plan to live in the community. Residents of some of these communities are notified so they may take precautions.