Office of Management and Budget (OMB)

வரவு செலவுத் திட்டமிடலுக்கான அலுவலகம்

தமிழ் விளக்கம்

அமெரிக்க அரசின் வரவுசெலவுத் திட்டமிடலையும், வருமானம், செலவு, மற்றும் நிதி சம்பந்தப்பட்ட விவகாரங்களையும் (fiscal policy) கண்காணித்து, அமெரிக்க ஜனாதிபதிக்கு ஆலோசனை சொல்ல ஏற்படுத்தப்பட்ட நிர்வாக அலகு. அரசின் கொள்கைகளைச் செயல்படுத்தத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்வதற்கும், பல்வேறு அரசுத்துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை எப்படிச் செலவழிக்கின்றன என்பதைக் கண்காணித்து அதைச் சரிசெய்யவோ, மேம்படுத்தவோ தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்க ஜனாதிபதிக்கும், பாராளுமன்றத்திற்கும் இந்த அமைப்பு ஆலோசனை சொல்கிறது.

English

The office within the executive branch of the U.S. government that assists the president in preparing the federal budget and formulating the nation's fiscal program. OMB also helps the president administer the budget and determine if allocated funds are sufficient for achieving their goals. OMB keeps the president informed about how various government agencies funds are being spent and helps in proposing legislation for congressional action.