Old Age and Survivors Insurance (OASI)
முதியவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கான காப்பீடு
தமிழ் விளக்கம்
உலகின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டம் என்றழைக்கப்படும் அமெரிக்க சமூகப் பாதுகாப்பு திட்டத்தில் மிக அதிகமானவர்கள் பயன்பெறும் திட்டம், முதியவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கான காப்பீடுத் திட்டம். ஏழு அமெரிக்கர்களில் ஒருவர் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்றனர். ஒருவர் பணிபுரியும் காலத்தில் அவர் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட பணத்தைக்கொண்டு, அவரின் ஓய்வு காலத்திலோ, 65 வயதடைந்த பின்னரோ வழங்கப்படும் உதவித்தொகை. ஊதியம் பெரும் ஒவ்வொருவரும் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டு, அவர் ஓய்வு பெற்ற பின்னரோ, பணிபுரிய இயலாத போதோ அல்லது அவர் மரணத்திற்குப்பின் அவரைச் சார்ந்திருப்பவர்களுக்கோ இந்த உதவித்தொகை வழங்கப்படும். சீரமைக்கப்பட்ட சமூகப்பாதுகாப்புச் சட்டத்தின் படி முதியவர்கள், சார்ந்திருப்பவர்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கும் இத்திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது
English
A central part of the Social Security Act of 1935 under which certain people older than age 65 or their surviving dependents were covered by the federal insurance program. With subsequent revisions in the Social Security Act, the insurance coverage was expanded to include workers who become disabled and ill (Old Age, Survivors, Disability, and Health Insurance [OASDHI]).