Old Age Assistance (OAA)

முதியோருக்கான உதவி

தமிழ் விளக்கம்

அமெரிக்காவில் நடைமுறையிலிருக்கும் முதியவர்களுக்கான நிறுவனப் பராமரிப்பற்ற (outdoor) சமூகப் பாதுகாப்புத் திட்டம். இத் திட்டம் அமெரிக்க மாநில அரசுகளின் நிதிஉதவியுடன் நடைபெறுவதால், வசிப்பிட ஆதாரங்களையும், உறவினர்களின் பொறுப்பையும் தகுதிகளாக்கிக் கொடுக்கப்படுவதால், திட்டப் பயன்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றது. 1935 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கட்டாய வருங்காலக் காப்பீட்டுத் திட்டத்தினால், முதியோர் உதவித் திட்டச் சுமை பெருமளவு குறைக்கப்பட்டது. பின்னர் 1972 ஆம் ஆண்டு, மாநில முதியோர் பாதுகாப்புத் திட்டங்கள், பார்வையற்றவர்களுக்கான உதவி (Aid to the Blind (AB), நிரந்தரமாக ஊனமுற்றவர்களுக்கான உதவி (Aid to the Permanently and Totally Disabled (APTD), மத்திய அரசின் முதியோருக்கான துணை வருமானப் பாதுகாப்பு திட்டம் (federal Supplemental Security Income (SSI) போன்றவற்றோடு இணைக்கப்பட்டது. பின்னர் 1996 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு மற்றும் சுய பொறுப்புச் சட்டத்தின் படி முதியோருக்கான உதவித் திட்டங்கள் பெருமளவு குறைக்கப்பட்டது.

English

A public assistance program for needy older people. Once the major form of outdoor relief in the United States, OAA was administered and financed by the states, leading to a wide variation in benefits and in stringent residency and relatives' responsibility requirements. The Social Security Act of 1935 and its compulsory insurance program to protect retired workers reduced but did not eliminate the need for OAA. In 1972, the state OAA programs were consolidated, along with the Aid to the Blind (AB) and the Aid to the Permanently and Totally Disabled (APTD) programs, into the federal Supplemental Security Income (SSI) program for needy older, blind, and disabled people. Many SSI provisions for older people were curtailed with passage of the Personal Responsibility and Work Opportunity Reconciliation Act of 1996.