Older Americans Act of 1965

முதியோருக்கான அமெரிக்கச் சட்டம் 1965

தமிழ் விளக்கம்

அமெரிக்க முதியவர்களின் நலனுக்கான அரசு சார்ந்த கொள்கைகளையும், அக்கொள்கைகளை அமுல்படுத்த நிர்வாக அமைப்பையும் உருவாக்கிய சட்டம். இந்தச் சட்டம் பலமுறை திருத்தம் செய்யப்பட்டது. இந்தச் சட்டத்தின்படியே முதியோர் சேவைக்கான பகுதி வாரியான நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டது. மூத்தோர் நலனுக்கு ஸ்தல ஸ்தாபன அரசுகள், தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செய்யும் பணிகளைக் கண்காணிப்பதுடன், மூத்தோருக்கான இல்லப் பராமரிப்பு, போக்குவரத்து உதவிகள், சட்ட உதவிகள் மற்றும் மூத்தோருக்குத் தேவையான சமூகத் தொடர்பாடல் மையங்கள் போன்ற சேவைகளை வழங்க இச்சட்ட விதிகள் ஆவண செய்கிறது.

English

The federal legislation (P.L. 89-73), with several subsequent amendments, that defined U.S. policy toward older people and created the Administration on Aging (AoA) to carry it out. The administration oversees state and city agencies that contract with private providers such as Area Agencies on Aging (AAA), as well as directly offers homemaker services, transportation, socialization programs in senior citizens' centers, and legal aid services for older people.