oncology

புற்றுநோயியல்

தமிழ் விளக்கம்

புற்றுநோயியல் (Oncology) என்பது புற்றுநோய் தொடர்பான மருத்துவ அறிவியல் துறை ஆகும். கிரேக்கத்தில் ஒன்கோசு என்றால் திரள், பொருண்மை, அல்லது கட்டி என்றும் லாஜி என்றால் கற்றல் எனவும் பொருள்படும்; ஆங்கிலத்தில் ஓன்கோலாஜி என அழைக்கப்படும் இது கட்டிகளைப் பற்றிய அறிதல் எனப்படும். இத்துறையில் சிறப்பு மருத்துவக் கல்வி பெற்ற மருத்துவர் புற்றுநோய் மருத்துவர் அல்லது ஓன்கோலாஜிஸ்ட் (Oncologist) என அழைக்கப்படுகிறார். புற்று நோயியல் மருத்துவத்தில், ஒரு நோயாளிக்குப் புற்றுநோய் உள்ளதா என நோய் கண்டறிதல், சிகிச்சை (அறுவைச் சிகிச்சை, வேதிச்சிகிச்சை, கதிர் மருத்துவம் மற்றும் பிற செய்முறைகள்), புற்றுநோய்களை வெற்றிகரமாக குணப்படுத்திய பிறகு தொடர் கண்காணிப்பு, இறுதிநிலை புற்றுநோய் நோயாளிகளுக்கு நோய்த் தணிப்பு பேணல், புற்றுநோய் குறித்து குறிப்பாக, மார்பகப் புற்றுநோய் போன்ற நோய்கள் பரம்பரை அடிப்படையில் ஏற்படுவதாக நம்பப்படும் புற்றுநோய்களுக்கு, பொதுமக்களிடையே அல்லது நோயாளிகளின் உறவினர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

English

The medical specialty that studies and treats cancer and tumors.