online public-access catalogs (OPACs)
இணைய வழி அனைவரும் அணுகத்தக்க நூற்பட்டியல்
தமிழ் விளக்கம்
ஒரு நூலகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை (நூல்கள் மற்றும் பிற தகவல்கள்) அகரவரிசைப்படி தொகுத்து கணனிமயமாக்குதல். அட்டைகள் மூலமாக அகரவரிசைப் பெயர்பட்டியல் தயாரிக்கும் முறை, கணனிமயமாக்கப்பட்ட பின் வழக்கொழிந்து, கணனி வழியாகத் தகவல்களைத் தேடும் முறை சாத்தியமானது. நூலத்திற்கு நேரடியாகச் செல்லாமல் ஒரு நூலகத்திலோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நூலகத்திலோ இருக்கும் தகவல்களை ஒரே நேரத்தில் பலர் இணையம் வழியாக அணுகிப் பார்க்கும் முறை சாத்தியமானது.
English
Computerized databases that index a library's holdings. OPACs began replacing card catalogs in the 1970s in most libraries and are now being integrated to include what is available in other libraries as well.