online support group
இணைய வழி உதவிக்குழுக்கள்
தமிழ் விளக்கம்
கணனியின் உதவிகொண்டு இணையம் வழியாகப் பிறருடன் தொடர்பாடி, தங்களுக்கான தகவல்கள், ஆலோசனை, உதவிபெரும் மற்றும் உத்வேகம் பெரும் முறை. இது பொதுவான தலைப்புகள் பற்றியோ அல்லது பரஸ்பரம் அக்கறை கொண்ட விசயங்கள் பற்றியோ ஒருவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ளாமல் அதில் ஆர்வமுள்ள பிறரிடம் மின்னஞ்சல் மூலமாகவோ, தொடர்புத் தொகுப்பிகள் (listserver) மூலமாகவோ, அரட்டை அறைகள் (chat rooms) மூலமாகவோ தொடர்புகொண்டு உதவிபெரும் முறை. சமூகப்பணியாளர்களும், மானுட சேவையில் ஈடுபட்டிருக்கும் பிறரும், இந்த மாதிரியான குழுக்களைத் தொடர்புகொண்டு, தங்களுக்குத் தேவைப்படும் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள முடிகிறது.
English
A form of computer-mediated social interaction using the Internet to enable participants to receive and provide information between one another, as well as advice, resources, and encouragement. Using e-mail, chat rooms, and especially listservs, the participants have almost immediate access to one another and can communicate anonymously on specific issues of mutual concern or general topics of common interest. Professional groups, including social workers, have found that such groups can ease on-the-job stress and provide support and consultation for professional issues.