open adoption
வெளிப்படையான புத்திர சுவீகாரம் / தத்தெடுத்தல்
தமிழ் விளக்கம்
தத்தெடுத்தல் என்பது இரத்த உறவு இல்லாத குழந்தை ஒன்றுக்குப் பெற்றோராக (வளர்ப்புத் தந்தை அல்லது தாய்) செயற்படல் ஆகும். தத்தெடுப்புகளில் 1. மானியத் தத்தெடுப்பு (subsidized adoption) 2. சுயாதீனத் தத்தெடுப்பு (independent adoption) 3. நிறுவனம் சாராத தத்தெடுப்பு (gray-market adoption), 4. சட்டபூர்வமற்ற தத்தெடுப்பு (black-market adoption), மற்றும் 5. பிறநாட்டுக் குழந்தைகளைத் தத்தெடுத்தல் (intercountry adoption) என்று பலவகையுண்டு. வெளிப்படையான தத்தெடுப்பு என்பது தத்தெடுப்பவர், தான் எந்த முறையைக் கையாண்டு தத்தெடுத்தாலும், அக்குழந்தையைப் பெற்ற பெற்றோரையோ அல்லது தாயையோ தொடர்பு கொண்டு அவரின் குழந்தையைத் தத்தெடுக்கும் விஷயத்தைச் சொல்வதுடன் நிற்காமல், அவர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்வதுடன் மட்டுமல்லாமல், அக்குழந்தையின் வளர்ச்சியைப் பற்றிய தகவல்களையும் பரிமாறிக்கொள்வது.
English
The legal and social services process of adoption in which adoptive parents and birth mother or birth parents become known to each other and, in many instances, continue some contact through the child's development. See also independent adoption.