open-door policy
வெளிப்படையான கொள்கை, எல்லோராலும் அணுக்கத்தக்க நடைமுறை, எல்லோரையும் சமமாகப் பாவிக்கும் தன்மை
தமிழ் விளக்கம்
இது பல துறைகளிலும் பயன்படுத்தப்படும், நெகிழ்வான நிர்வாக நடைமுறையைக் குறிக்கும் சொல். இச்சொல்லாடல் அமெரிக்க அரசின் செயலராகப் பணியாற்றிய ஜான் ஹே என்பவரால், சீனாவுடன் வியாபாரம் செய்யும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வர்த்தக உறவுகளில் பாரபட்சமற்ற சமநிலையைப் பேணவேண்டும் என்று வலியுறுத்திய குறிப்புகள். எல்லோராலும் சமமாக அணுகத்தக்க இந்த நடைமுறை இன்று பல நிர்வாக அமைப்புகளில் பின்பற்றப்படுகிறது. இது 1. சர்வதேச உறவுகளில், குடியேற்றத்திற்கு குறைந்தபட்சத் தடைகள் அல்லது தடைகளற்ற அணுகுமுறைகளைக் குறிக்கும். 2. நிர்வாக இயலில் நிறுவனப் பணியாளர்கள் தங்கள் மேற்பார்வையாளர்களையோ அல்லது துறைத் தலைவர்களையோ எளிதில் அணுகி துறை சமந்தப்பட்ட விசயங்களை பற்றிக் கலந்துரையாடும் சூழலைக் குறிக்கும். 3. நிறுவனமயப்படுத்தப்பட்ட இடங்களில் தங்கியிருப்பவர்கள் தாங்கள் விரும்பும் காலம் வரைக்கும் தங்கிருப்பதற்கும், வெளியேற நினைக்கும் போது எந்தக் கட்டுப்பாடுகளுமின்றி வெளியேறிக் கொள்ள அனுமதிக்கப்படும் சுதந்திரத்தைக் குறிக்கும்.
English
1. The authorization given to employees of an organization to have ready access to supervisors and the department heads and the freedom to discuss any relevant subjects. 2. In international relations, minimal or no restrictions on immigration. 3. In social administration, the organization understanding that there is free access to supervisors and board members, not necessarily on immediate demand but at times that are regular and convenient. 4. In institutional settings, the permission extended to residents that they are free to leave the facility whenever they desire.