open-ended questions

வெளிப்படையான கருத்துக்களைப் பெற உதவும் கேள்விகள், கருத்துத் திறப்பிற்கு உதவும் கேள்விகள்

தமிழ் விளக்கம்

சமூகப்பணியிலும் பிற கருத்துக் கணிப்பு ஆய்வுகளிலும் பதிலளிப்பவர் தான் விரும்பும் வகையில் தன் கருத்துக்களைத் தெரிவிக்க வழிசெய்யும் கேள்வி முறை. இது கருத்துக்களுக்கோ, கற்பனைக்கோ இடமாளிக்காமல் துல்லியமான பதில்களைப் பெற உதவும் கேள்வி முறையிலிருந்து (close ended questions) மாறுபட்டது. உதாரணமாக, மேலதிகாரியுடன் இணக்கமாக நடந்து கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்பதைவிட, மேலதிகாரியுடன் உங்களால் இணக்கமாக நடந்துகொள்ள முடியாமையை பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்கும் போது பதிலளிப்பவர் தன்னுடைய கருத்தைச் சொல்ல வாய்ப்பேற்படும். ஆய்வு நோக்கம் பொறுத்து இரண்டு வகையான கேள்விமுறைகளும் முக்கியத்துவம் கொண்டதாகவே கருதப்படுகிறது.

English

In the social work interview, as well as in systematic opinion research, a form of questioning that permits the respondent to answer any way he or she wants. This is in contrast to closed-ended questions (such as yes-no or multiple choice). For example, the social worker asks "Why do you think it is difficult to get a job?" instead of "Is it difficult for you to get a job ?" Both types of question are useful in the social work interview, depending on the goals of the working relationship. See also questioning.