open-ended service versus time-limited service
காலவரையறைக்குட்பட்ட, காலவரையறைக்குட்படாத சேவை
தமிழ் விளக்கம்
கால வரையறைக்குட்பட்ட சேவை / சிகிச்சை முறை நல்ல பலனைத்தருமா அல்லது கலவறையற்று தொடரும் சேவை / சிகிச்சை பலனைத் தருமா என்பது சமூகப்பணியில் ஒரு விவாதப்பொருள். வாடிக்கையாளரின் பிரச்சனைகள் சில நேரங்களில் நினைத்துப் பார்க்கமுடியாத உட்சிக்கல் கொண்டிருப்பதையும், சிகிச்சையின் போது என்னவிதமான பிரச்சனைகள் தோன்றும் என்று முன்னறிய முடியாததாலும், பிரச்சனைகளை முழுமையாக அன்றி தனித்தனியாகப் பகுத்தாய்ந்து சிகிச்சை அளிப்பது எதிர்பார்த்த பலனைத் தராது என்பதாலும், வாடிக்கையாளரும் சமூகப்பணியாளரும் பரஸ்பர பரிச்சயம், சகஜமாக உறவாடி நம்பகத்தன்மையை வளர்த்துக்கொள்ள கால அவகாசம் தேவைப்படுவதால், கால வரையறைக்குட்படாத சேவையை / சிகிச்சையை சில சமூகப்பணியாளர்கள் வற்புறுத்துகிறார்கள். ஒரு சேவை / சிகிச்சை கால வரையறைக்கு உட்படும்போதுதான் சமூகப்பணியாளர்களும் வாடிக்கையாளர்களும் எதையும் காலம் தாழ்த்தாமல் திறனுடன் செயல்படுகிறார்கள் என்றும், இந்த முறையால் அதிக வாடிக்கையாளர்களுக்கு சேவை / சிகிச்சையளிக்க முடியுமென்றும், அதனால் சிக்கனமானது என்றும், காலவரையறைக்குட்பட்ட சேவை / சிகிச்சையை அளிப்பவர்கள் வாதிடுகிறார்கள். இரு வாதங்களையும் நியாயப்படுத்தக் காரணங்கள் இருந்தாலும் சில வாடிக்கையாளர்கள் தொடர் கவனிப்பால் பயன்பெறுகிறார்கள். சில வாடிக்கையாளர்கள் குறுகிய கால சேவை / சிகிச்சையால் பயன் பெறுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது அந்தந்த வாடிக்கையாளருக்கும், அவர்தம் பிரச்சனைக்கும் ஏற்ற கால அவகாசத்தைச் சமூகப்பணியாளர் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.
English
The debate in social work about whether clients are better served with or without time limits on the therapeutic relationships. Arguments for the open model include the following: It is possible to address "deeper" issues; an individual cannot know in advance what will be uncovered in the intervention; clients' problems cannot be compartmentalized as is re quired in the closed model; and social workers, as well as clients, are more familiar and comfortable with the open model because it has been the traditional model of mainstream clinical social work practice. Arguments for the time-limited model include the following: Effectiveness and efficacy studies show time-limited work is at least as effective and much less costlythus, more clients can be served; clients intensify their efforts under time constraints and do not procrastinate as much; even in long-term treatment, most of the gains are accomplished within the first six sessions; and most clients drop out of treatment after a few sessions anyway. Practitioners continue to present new arguments on each side. Possibly the "truth" is that some clients and some social workers would do better in one model and others would do better in the other model.