opinion survey
கருத்துக் கணிப்பு
தமிழ் விளக்கம்
ஒரு குறிப்பிட்ட பகுதியில், குறிப்பிட்ட காலகட்டத்தில் அங்கு வாழும் மக்கள் ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றி என்ன மாதிரியான கருத்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை முறையாக அறிந்துகொள்ள பயன்படுத்தப்படும் தரவு சேகரிக்கும் முறையைக் கருத்துக்கணிப்பு என்கிறோம். அங்கு வாழும் மக்களைப் பிரதிநிதிப்படுத்தும் அளவிற்கு மாதிரிகளைத் (sample) தேர்வு செய்து, அவர்களை நேரடியாகப் பேட்டிகண்டோ அல்லது அவர்களே பதில்சொல்லும்படியான கேள்வித்தாள்களின் மூலமாக அவர்களின் கருத்தறியும் முறை. மக்களின் பிரச்சனைகளை, அவர்களின் அபிலாட்சைகளை சம்மந்தப்பட்டவர்களுக்குத் (நிர்வாகத்திற்கு) தெரிவிக்க, சமூகச் செயல்பாட்டாளர்கள், சமுதாய அமைப்பாளர்கள், திட்டமிடுபவர்கள் இந்த முறையைக் கையாள்வதுண்டு.
English
A systematic datagathering technique used to determine what people at a given time in a given area think about a certain subject. A representative sample of the population being investigated is interviewed verbally or by means of a structured and sometimes self-administered questionnaire. Opinion surveys of certain communities are often made by social activists, planners, and community organizers to understand and later influence the concerns, problems, and goals of the people.