opium

ஒபியம்

தமிழ் விளக்கம்

ஒபியம் செடியிலிருந்து காய்க்கும் காய்களைக் கத்தியால் கீறும்போது அதிலிருந்து பிசின் போன்ற திரவம் கசியும். இந்தத் திரவம் காயும் போது பழுப்பு நிறப் பிசினாகக் காய் மீது ஒட்டியிருக்கும். இந்தப் பிசினை பல விதங்களில் பயன்படுத்தி போதை மருந்துகள் செய்யபடுகிறது. இந்தியாவிலும் ஓபியம் அதிகம் பயிரிடப்படுகிறது. இங்குதான் பாரம்பரிய முறையில் (கத்தியில் கீறி பிசின் எடுப்பது) ஓபியம் எடுப்பதும் நடைமுறையில் இருக்கிறது. ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்தியாவை விடக் கொஞ்சம் குறைவாக ஆனால் உலக அளவில் இதன் உற்பத்தியில் முக்கிய இடம் வகிப்பவை. மற்ற நாடுகளில் கிரிகரி (Gregory) முறையில், அதாவது இலைகள், வேர் தவிர்த்து மொத்த தாவரத்தையும் கசக்கி, நீர்த்துப் போன அமிலத்தில் ஊற வைத்து, பின்னர் அமிலம் அல்லது காரம் சேர்த்துச் சுத்தம் செய்வார்கள். ஓபிய‌த்தின் ம‌ல‌ர்க‌ள் ப‌ல‌ வித‌ வ‌ண்ண‌ங்க‌ளிலும், அள‌விலும் அழ‌காக‌ இருக்கும். சிறிய‌ அள‌விலான, காய்ந்த ஓபிய‌ம் விதைக‌ள் (குறைந்த‌ அள‌வு ஆல்க‌லாய்ட் கொண்ட‌வை) ரொட்டி, கேக் போன்ற‌வ‌ற்றில் அல‌ங்கார‌ப் பொருட்க‌ளாக‌க் கூட‌ உப‌யோக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌ன. ஒபியத்திலிருந்து பெறப்படும் பொருட்களும், இதில் சேர்க்கப்படும் பொருட்களும், வலி நீக்கிகளாகப் பயன்படுகின்றன. இதனால், சட்டத்துக்கு அமைவான அபினி உற்பத்தி, ஐக்கிய நாடுகள் அமைப்பாலும், அனைத்துலக ஒப்பந்தங்களினாலும் கட்டுப்படுத்தப்படுவதுடன், தனிப்பட்ட நாடுகளின் சட்ட அமுலாக்க அமைப்புக்களின் கடுமையான கண்காணிப்புக்கும் உட்படுகின்றது.

English

A narcotic drug extracted from the juice of the opium poppy. It has been used for centuries as an effective pain killer; however, because of its habit- forming properties, the drug is restricted in most nations. Opium is processed to produce morphine, codeine, heroin, and laudanum.