opportunity costs

பிறவாய்ப்புச் செலவு, வாய்ப்புகளுக்கு இடையேயான பயனும் செலவும்

தமிழ் விளக்கம்

ஒரு குறிப்பிட்ட செயலைக் குறிப்பிட்ட முறையில் செய்வதற்காக நாம் செலவழித்த செலவும், அதே செயலை மாற்று வழிகளைக் கையாண்டு செய்திருந்தால் ஆகியிருக்கும் செலவிற்கும் உள்ள வித்தியாசம். சமூகத் திட்டமிடலில் ஒரு குறிக்கோளை அடைய, குறிப்பிட்ட வழியைக் கையாண்டு செய்யப்பட்ட முயற்சிகளையும், செலவினங்களையும், அந்தக் குறிக்கோளை மாற்று வழிகளைக் கையாண்டு செய்திருந்தால் ஆகக்கூடிய முயற்சிகளோடும், செலவினங்களோடும் ஒப்பிட்டுப் பார்த்து, எந்தெந்த வழிகளில் இழப்பு ஏற்பட்டுள்ளது, எந்தெந்த வழிகளில் நன்மை ஏற்பட்டுள்ளது என்று அறிய உதவும் பொருளாதாரக் கணக்கீடு முறை.

English

A social planning concept in which the value of the resources that must be expended to achieve a certain objective is weighed against the cost of alternatives that would have to be forgone to achieve that objective.