opportunity programs

வாய்ப்புகளைப் பயன்படுத்த உதவும் திட்டங்கள்

தமிழ் விளக்கம்

வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளை சரிசெய்யவோ அல்லது பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு வாழப் பழகிக்கொள்ளவோ அல்லது பிரச்சனைகளுக்கான உளவியல் காரணங்களைக் கண்டறிந்து வழிப்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டிராமல், சமூகத்தில் பெரும்பான்மையினருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பெற வாடிக்கையாளர்களின் திறனை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட சமூக நலத் திட்டங்கள். எடுத்துக்காட்டாக குற்றச் செயல்களில் ஈடுபட சாத்தியமுள்ள இளைஞர்களுக்கு சமூக, பொருளாதார மற்றும் தொழில் திறன்களை வளர்த்து, அவர்களை வேலைக்குத் தகுதியானவர்களாக்கி, பொது நீரோட்டத்தில் அவர்களை இணையச் செய்ய எடுக்கப்படும் முயற்சிகளை இதற்கு உதாரணமாகக் காட்டலாம்.

English

Social welfare programs and organizations with an orientation toward preparing client groups for greater access to the opportunities that exist for others. The goal of such programs is not necessarily to help clients "adjust" or gain insight but to acquire skills and resources. For example, the Mobilization for Youth program was oriented toward helping young people who were vulnerable to juvenile delinquency to learn social, economic, and vocational skills so they would have a better chance of entering the economic mainstream.