oppositional defiant disorder
முரண்டு பிடிக்கும் சுபாவம், அடங்க மறுக்கும் சீர்கேடு
தமிழ் விளக்கம்
சிறுவர்களும், வளரிளம் பருவத்தினரும் வீட்டிலும், வெளியிலும் (குறிப்பாகப் பள்ளியிலும்) கீழ்ப்படியாமல் நடந்துகொள்வதும், பெரியவர்கள் சொல்வதைக் கேட்க மறுப்பதும், அதிகாரத்திலுள்ளவர்கள் எரிச்சல்படும்படியும், கோபப்படும்படியும் நடந்துகொள்வதுமான நடத்தைப் பாங்கு. அடங்க மறுக்கும், முரண்டு பிடிக்கும் இது நடத்தைச் சீர்கேடு போன்று தோன்றினாலும், நடத்தைச் சீர்கேட்டில் தென்படுகின்ற பள்ளிக்கு செல்லாமல் சுற்றியலைதல், திருடுதல், பிறர்மீது வன்முறை பிரயோகித்தல், உடமைகளைச் சேதப்படுத்தல் போன்ற அறிகுறிகள் தென்படுவதில்லை. இந்த அடங்கமறுக்கும் சீர்கேட்டில் அழிப்புத் தன்மையைவிட, ஒத்துழையாமையே பிரதான வெளிப்பாடாகத் தென்படும்.
English
Persistent negative, defiant, and disobedient behavior found in childhood and adolescence, usually including provocative defiance of authority and resistance to rules. Oppositional defiant disorder is similar to conduct disorder (a pattern of truancy, theft, physical aggression, vandalism, and so forth), except it is not as severe and more typically involves refusal to cooperate rather than destructiveness of others.