oppression
அடக்குமுறை, கொடுங்கோன்மை, ஊக்க இழப்பு, அட்டூழியம், கொடுமை, தாங்கொணாத் துன்பநிலை, கடுமுடுக்கு
தமிழ் விளக்கம்
அடக்குமுறை என்பது தனிமனிதர்கள், குழுக்கள் அல்லது நிறுவனங்கள் மீது தாங்கிக்கொள்ள முடியாத, நியாயமற்ற, கொடூரமான கட்டுப்பாடுகளை விதிக்கும் செயல். இந்தக் கட்டுப்பாடுகள் அரசாலோ, நிறுவனங்களாலோ, வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ விதிக்கப்பட்டு, அதிகாரத்திலுள்ள குழுக்களுடனும், அதிகாரத்திற்கு ஆதரவான குழுக்களுடனும் போட்டியிட இயலா சூழ்நிலையை உருவாக்கும். இக்கட்டுப்பாடுகள் மூலம் அடக்கப்பட்ட குழுவினர், சுயமரியாதையை இழந்து, சுரண்டலுக்கு உள்ளாகி, சலுகைகள் பறிக்கப்பட்டு, தன்னம்பிக்கை இழக்கும் சூழல் உருவாகும். இந்த அடக்குமுறை சமூக ரீதியாக (தீண்டாமை, ஒதுக்கி வைத்தல்), நிறுவன ரீதியாக (விதிகள், வழக்கங்கள், மதிப்பீடுகள்), அமைப்பு ரீதியாக (ஜாதி, மதம், இனம்), உளவியல் ரீதியாக, பிரச்சார ரீதியாக பல வழிகளைக் கையாண்டு செய்யப்படும்.
English
The social act of placing severe restrictions on an individual, group, or institution. Typically, a government or political organization that is in power places these restrictions formally or covertly on oppressed groups so that they may be exploited and less able to compete with other social groups. The oppressed individual or group is devalued, exploited, and deprived of privileges by the individual or group who has more power.