oral personality
வாய்ப்பருவ ஆளுமை, வாய்சார்ந்த ஆளுமை, வாய்வழி ஆளுமை, சப்புப் பருவ ஆளுமை
தமிழ் விளக்கம்
சிக்மண்ட் பிராய்ட், உளரீதியான பாலுணர்வு வளர்ச்சி ஐந்து நிலைகளில் ஏற்படுவதாகக் கணித்தார். அவையாவன. 1. வாய்நிலைப் (சப்பு) பருவம் - Oral stage, 2. குத பருவம் - Anal stage, 3. குறியின்பப் பருவம் - Phallic stage, 4. உள்ளுறைப் பருவம் - Latent stage, 5. பிறப்புறுப்புப் பருவம் - Genital stage. அந்தந்த நிலையின் வளர்ச்சிக்கு ஏற்றமாதிரி, உடலின் ஒவ்வொரு பகுதியும் உணர்வுமிக்க பகுதிகளாக (erogenous zones) அமையும். வாய்நிலைப் பருவத்தில் இன்ப இயல்பூக்கம் (libido) வாயைச் சுற்றியும், குத பருவத்தில் குதத்தைச் சுற்றியும், குறியின்பப் பருவத்தில் பாலினக் குறிகள் சார்ந்தும், கடைசியில் பிறப்புறுப்பு சார்ந்தும் இருக்கும். வாய்நிலைப் பருவத்தில் உறிஞ்சுதல், சப்புதல், முலைப்பால் குடித்தல் போன்ற வாயை மையப்படுத்திய செயல்கள் மூலம் ஒரு குழந்தை இன்ப இயல்பூக்கம் பெரும். வாய்நிலைப் பருவத்தில் அடைய வேண்டிய திருப்தி அல்லது இன்ப இயல்பூக்கம் குறைவு பட்டாலோ, மிகுந்தாலோ அதை ஈடு செய்யும் முகமாக புகை பிடித்தல், நகம் கடித்தல், விரல் சூப்புதல், மது அருந்துதல், வாய்வழிப் புணர்ச்சியில் இன்பம் காணுதல் போன்ற செயல்களில் பின்னர் ஈடுபடுவர். வாய்நிலை ஆளுமை என்பது, வளர்ந்த பின், உளப்பதட்டத்திற்கு உள்ளாகும் நேரங்களில் மேலேசொன்ன வாய் சார்ந்த காரியங்களைச் செய்வர்.
English
Also known as "oral character," a descriptive term from psychoanalytic theory referring to an individual who tends to be overly dependent or greedy and demands to be "filled up." This individual's satisfactions come largely through such activities as eating, smoking, drinking, and talking. These personality characteristics are thought to become fixed during the individual's first two years of life.