oral phase
வாய்ப் பருவம்
தமிழ் விளக்கம்
சிக்மண்ட் பிராய்ட் கணித்த உளரீதியான பாலுணர்வு வளர்ச்சி நிலைகளில் வாய்வழிப் பருவம் முதல் நிலைப் பருவமாகும். பிறந்ததிலிருந்து ஒரு வயது வரை (??) நீடிக்கும் இப்பருவத்தில் வாயும், வாய்க்குழியும் குழந்தையின் உணர்வுமிக்க (erogenous zone) பகுதியாகவும், இன்ப இயல்பூக்கத்தைத் தூண்டும் பகுதியாகவும் அமைகின்றது. தாயின் முலை உறிஞ்சுதல், விரல் சூப்புதல், எதையும் வாயில் வைத்துச் சப்புதல் போன்றவற்றில் குழந்தை மகிழ்கிறது.
English
The first stage in the psycho-sexual development of the personality, which occurs at ages up to two years. During this phase, the infant seeks pleasure by stimulating the mouth and oral cavity and experiences the world through literal or psychic incorporation. According to Freudian theory, during this age the zone of sexual pleasure is the oral cavity, which explains the intense satisfaction the infant derives from nursing. Self-concept and feelings of personal worth are usually said to develop during this stage.