organization
அமைப்பான்மை, அமைப்புமுறை, அமைப்பு, சங்கம், நிறுவனம்
தமிழ் விளக்கம்
ஒரு புறச்சூழலோடு இணைந்து குறிப்பிட்ட இலக்கை அடைய உருவான ஒரு அமைப்பு / நிறுவனம். சமூகப்பணியிலும், சமுதாய மேம்பாட்டுப் பணியிலும் தனிமனிதர்களும், குழுக்களும் தங்களுக்குப் பரஸ்பரம் நன்மை அளிக்கக் கூடிய இலக்குகளை அடைய அவர்களின் செயல்களை, தொடர்புகளை, ஒன்றிணைக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. இது பலநிலைப் பொருள்கொண்ட சொல்லாடல். 1. இது ஒன்றிணைந்து செயல்படும் குழுவைக் குறிக்கும். 2. ஒரு செயலைச் செய்வதற்கான அமைப்பாதலை, முஸ்தீபுகளைக் குறிக்கும். 3. ஒரு குழுவின் முயற்சிகளை ஒழுங்கமைத்தலைக் குறிக்கும். நிறுவனம் என்பது அமைப்புகளில் செயல்படுபவர்களின் தொடர்புகளை வழிநடத்த பின்பற்றப்படும், கூட்டு முயற்சியைக் கட்டுபடுத்தும் விதிமுறைகளைக் குறிக்கும்.
English
In social work and community development (CD), the process of helping individuals and groups arrange their activities, communication, and structure so that they can work together in a coordinated whole to achieve mutually beneficial goals.