organization development (OD)

நிறுவன மேம்பாடு

தமிழ் விளக்கம்

அமைப்பியல் கோட்பாட்டையும் மனித உறவுகள் அணுகுமுறையையும் கையாண்டு, நிறுவனங்களில் பணியாற்றும் பணிக்குழுக்களின் திறனை வளர்த்து, பணி மற்றும் இலக்கு ரீதியான பிரச்சனைகளைத் தீர்க்கவும், புதுமையாக்கல் மற்றும் ஒருங்கிணைப்பு மூலமாக பணியாளர்களிடையே தொடர்புகளை / உறவுகளை வலுப்படுத்தி உற்பத்தி திறன் மேம்படவும் கையாளப்படும் நிர்வாக உத்தி. இது தொடர்ந்து பின்பற்றப்படவேண்டிய நிர்வாக முறையாகும். இதற்காக உணர்திறன் பயிற்சிக் (sensitivity group) குழுக்கள், பயிற்சிக் குழுக்கள் (T-group), பின்னூட்டம் பெரும் முறைகள் (feedback systems), செயல்முறை ஆலோசனை (process consultation), குழு உருவாக்கம் போன்ற பல முயற்சிகளை நிறுவனம் மேற்கொள்ளும்.

English

The administrative technique that draws on systems theories and human relations orientations to enhance the group members' ability to solve problems together, communicate more effectively, and achieve greater efficiencies in production by encouraging innovation and coordination. OD is both a long-term process and a management style. It uses a variety of techniques including the sensitivity group, T-group, feedback systems, process consultation, and team building.