Organization of American States (OAS)
அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு
தமிழ் விளக்கம்
அமெரிக்கக் கண்டத்திலுள்ள வட, தென் அமெரிக்க (மேற்கத்திய நாடுகளை - western hemisphere) நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு, 1989 ஆம் உருவான கூட்டமைப்பு. பரஸ்பர சுய பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தாலும், சமூகநலம், மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி போன்ற விசயங்களிலும் உறுப்பு நாடுகளுக்கிடையே பரஸ்பர ஒத்துழைப்பு காணப்படுகிறது. இந்த அமைப்பின் துணை நிறுவனங்களாக கீழேகண்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன.
அமெரிக்க நாடுகளின் குழந்தைகளுக்கான நிறுவனம் (Inter-American Children's Institute) இது வட தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பின் ஒரு அங்கம். இந்நிறுவனம் இந்நாடுகளிலுள்ள குழந்தைகள், வளரிளம் பருவத்தினர் மற்றும் குடும்பங்களின் நலன் பேண உருவாக்கப்பட்டது. உருகுவே நாட்டின் மண்டிவிடீயோ (Montevideo, Uruguay) நகரத்திலிருந்து செயல்படும் இந்நிறுவனம், கூட்டமைப்பு நாடுகளின் குழந்தைகள் நலன் தொடர்பான கொள்கைகளை வடிவமைக்கவும், குழந்தைகள் நலச் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும் கூடுகிறது
அமெரிக்க நாடுகளின் மகளிருக்கான ஆணையம் (Inter-American Commission on Women) - இதுவும் வட தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பின் ஒரு அங்கம். இந்நிறுவனம் உறுப்பினர் நாடுகளில் மகளிருக்கான செயலகத்தை நிறுவி, இந்நாடுகளிலுள்ள மகளிருக்கான கல்வி, வேலைவாய்ப்பு, பெண்கள் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபடுகிறது
அமெரிக்க நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையம் (Inter-American Human Rights Commission) - இந்த ஆணையமும் வட தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பின் ஒரு அங்கம். இந்நாடுகளில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான முயற்சிகளிலும் அது துஷ்பிரயோகபடுத்தப்படாமல் கண்காணிப்பதில் ஈடுபடுகிறது
அமெரிக்க நாடுகளின் இந்தியர்களுக்கான நிறுவனம் (Inter-American Indian Institute) - இந்நிறுவனம் இந்த நாடுகளிலுள்ள பூர்வீக குடிகளான செவ்விந்தியர்கள் கல்வி, பொருளாதாரம் ஆரோக்கியம், சமூக நலன் போன்ற தளங்களில் மற்றைய இனத்தவருக்குச் சமமான முறையில் முன்னேற்றம் கண்டு, வெகுஜன நீரோட்டத்தில் அவர்களை இணைக்கப் பாடுபடுகிறது.
அமெரிக்க நாடுகளின் சமூக மேம்பாட்டிற்கான மையம் (Inter-American Social Development Center (CIDES) - ஏர்ஸ், அர்ஜென்டினா நாட்டின் போனசயர்ஸ் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம், கூட்டமைப்பு நாடுகளின் ஆய்வு நிறுவனமாகச் செயல்படுகிறது. இந்நிறுவனம் ஒவ்வொரு நாட்டளவிலும், பிராந்திய அளவிலும் சமூக மேம்பாட்டைத் திறம்பட செய்யத் தேவையான சமூகத் திட்டமிடலுக்கும் மற்றும் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கும் பயிற்சிகள் அளிக்கிறது.

English
The political association of most nations in the Western Hemisphere, founded as the International Conference of American States in 1989 and later called the Pan American Union. In addition to its role in mutual self-defense and economic cooperation, OAS is actively engaged in social welfare, human rights, and social justice. Some of its specialized social welfare agencies include the Inter-American Human Rights Commission, Inter-American Children's Institute, Inter-American Commission on Women, Inter-American Indian Institute, and the Inter-American Social Development Center (CIDES).