organizational theory

அமைப்பியல் கோட்பாடு

தமிழ் விளக்கம்

ஒரு அமைப்பு / நிறுவனம் தன்னுடைய இலக்குகளை அடைய எப்படி வடிவமைக்கப்படுகிறது, அதற்கான கட்டமைப்பு வசதிகள் என்ன, அது சுற்றுச் சூழலுடனும் பிற அமைப்புகளுடனும் எப்படி தொடர்பு கொண்டுள்ளது, அந்த நிறுவனத்தின் மேலாளர்களும், தொழில்நுட்ப பணியாளர்களும் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அறிய உதவும் அணுகுமுறை. ஒரு நிறுவனத்தைப் புரிந்துகொள்ள பலவிதமான அணுகுமுறைகள் உள்ளன. ஒரு நிறுவனத்தின் அதிகார அமைப்பு, அதிகாரப்படிநிலைகள், இலக்குகளை அடைய பணியாளர்களுக்கு தேவைப்படும் சிறப்புத் திறன்கள், பணியாளர்களின் பணிமதிப்பீடுகளை அளவிடல் போன்றவற்றை அறிந்துகொள்ள மரபார்ந்த (classical school) அணுகுமுறை உதவுகிறது. அறிவியல் (scientific management school) அணுகுமுறையென்பது ஒரு நிறுவனப்பணியாளர்களின் செயல்களை, ஒரு பணியை செய்துமுடிப்பதற்கான நேரத்தையும் அதற்கான இயக்கங்களையும், அதற்கேற்றாற்போல் தேவைப்படும் சிறப்பு நிபுணத்துவத்தையும் அறிய உதவுகிறது. மனித உறவு (human relations school) அணுகுமுறையில் பணியாளர்களுக்கிடையே உருவாகும் பரஸ்பரத் தொடர்புகளையும், உத்தியோகபூர்வமற்ற, சம்பிரதாயம் சாராமல் ஏற்படும் குழு உணர்வுகளையும், பணியாளர்களின் சமூகத் தேவைகளை பூர்த்திசெய்ய நிறுவன இலட்சியங்கள் எந்த அளவு உதவுகிறது என்பதை அறிந்துகொள்ள உதவுகிறது. அமைப்பியல் (structuralist or systems orientation) அணுகுமுறை ஒரு நிறுவனம் தன்னுடைய இலக்குகளை அடைய சுற்றுச் சூழலுடன் எந்த மாதிரியான தகவமைப்பை மேற்கொள்கிறது என்பதை அறிய உதவுகிறது.

English

Conceptual frameworks about the ways an organization fulfills its functions. Several theories or schools have tried to explain this. The classical school emphasizes bureaucratic structure, defined lines of authority, specialized functions by employees, and criteria for performance evaluations. The scientific management school emphasizes the use of measurements of human activity and uses time and motion studies and "efficiency experts." The human relations school emphasizes the interrelationship of the work group members, the informal network of workers, and the relationship between the organization's goals and the workers' social needs. The structuralist or systems orientation sees the organization as an adaptive whole within a changing environment. Human services organizations differ from others in that their "raw material" and product are the people being served.