organizations
அமைப்பான்மை, அமைப்புமுறை, அமைப்பு, சங்கம், நிறுவனம்
தமிழ் விளக்கம்
1. முன் தீர்மானிக்கப்பட்ட குறிக்கோள்களை அடைய மனித முயற்சியையும், குறிக்கோளை அடைவதற்கேற்ற திறமைகள், செய்முறைகள், மற்றும் ஆதாரங்களை முறையாக ஒருங்கிணைத்து அதற்குச் செயல்வடிவம் தருவது. 2. குறிப்பிட்ட குறிக்கோளை அடைய மனிதர்களுடைய முயற்சியை முறையாகப் பயன்படுத்துவது. 3. ஒரு புறச்சூழலோடு இணைந்து குறிப்பிட்ட இலக்கை அடைய உருவான ஒரு அமைப்பு / நிறுவனம். அமைப்பென்பது சமூகப்பணியிலும், சமுதாய மேம்பாட்டுப் பணியிலும் தனிமனிதர்களும் குழுக்களும் தங்களுக்குப் பரஸ்பரம் நன்மை அளிக்கக் கூடிய இலக்குகளை அடைய அவர்களின் செயல்களை, தொடர்புகளை, ஒன்றிணைக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. அமைப்பென்பது பலகோணங்களில் புரிந்து கொள்ளப்படவேண்டியது. இது ஒன்றிணைந்து செயல்படும் குழுவையும், ஒரு செயலைச் செய்வதற்கான அமைப்பாதலை, முஸ்தீபுகளையும், ஒரு குழுவின் முயற்சிகளை ஒழுங்கமைத்தலையும் குறிக்கும். ஆனால் நிறுவனம் என்பது அமைப்புகளில் செயல்படுபவர்களின் தொடர்புகளை வழிநடத்தப் பின்பற்றப்படும், கூட்டு முயற்சியைக் கட்டுபடுத்தும் விதிமுறைகளைக் குறிக்கும். பொதுவாக முதிர்ச்சி பெற்ற அமைப்புகளே (organization) நிறுவனம் (institution) எனப்படுகின்றன (எ.கா செயல் - செயல்பாடுகள் செயல்பாடுகளின் தொகுப்பு - அமைப்பு - நிறுவனம் Act - Activities - System - Organisation - Institution)
English
Formally structured arrangements of people, tools, and resources brought together to achieve predetermined objectives through institutionalized strategies.