orphanage

அனாதை இல்லம், ஏதிலிகாப்பகம், புகலகம், அநாதை ஆசிரமம்

தமிழ் விளக்கம்

பெற்றோரற்ற குழந்தைகளையோ அல்லது ஏழைக்குழந்தைகளையோ உண்டி மற்றும் உறைவிடம் கொடுத்துப் பராமரிக்கும் இல்லங்கள். அனாதை இல்லம் என்ற சொற்பிரயோகம் இப்போது வழக்கொழிந்து வருகிறது. சிறார் இல்லங்கள் என்று அழைக்கப்படுகிறது. இவ்வில்லங்களில் பராமரிக்கப்படும் குழந்தைகளுக்கு வளர்ப்புப் பெற்றோர் அல்லது நலம் பேணுனர் என்று யாராவது இருப்பர்.

English

A residential institution for parentless or poor children. In the United States, most such facilities have been dismantled in favor of various foster care programs, although they are still common in many other nations.