orthopsychiatry

சரியாக்கும் உளமருத்துவம், முற்காப்பு உளமருத்துவம், நலம்பேணும் உளமருத்துவம்

தமிழ் விளக்கம்

ortho என்றால் நேராக்கல், சரியாக்கல் என்று பொருள்படும். orthopsychiatry என்றால் மன நோய்களைக் குழந்தைப் பருவத்திலே அல்லது தொடக்கத்திலே கண்டறிந்து, அதைத் தடுப்பதற்காகப் பாடுபடும், சமூகப்பணியாளர்கள், செவிலியர், நலம்பேணுனர் (nursing), உளமருத்துவர், உளவியலாளர், மற்றும் சட்ட வல்லுனர் போன்ற பல்துறை நிபுணர்கள் ஒன்றிணைந்து செயல்படும் அறிவியல் முறை. மருத்துவத்தில் நோய்த் தடுப்பு மருத்துவத் துறை (preventive medicine) போன்றது. அமெரிக்க முற்காப்பு உளமருத்துவ சங்கம், 1924 ஆம் ஆண்டு நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு முற்காப்பு உளமருத்துவம் என்ற காலாண்டிதழை வெளியிடுகிறது.

English

An interdisciplinary field that emphasizes the development of mental health from early childhood on, prevention of mental illness, and the early (childhood) treatment of those who have a mental disorder. The American Association of Orthopsychiatry, which was founded in 1924 and is based in New York, publishes the quarterly journal Orthopsychiatry.