osteogenesis imperfecta
எலும்பு உருவாக்கக் குறைபாடு, எலும்பாக்கக் குறைபாடு, எலும்பு வளர்ச்சியின்மை
தமிழ் விளக்கம்
மிக மென்மையான, எளிதில் உடையும் தன்மை கொண்ட மிக ஆபூர்வமான மரபு ரீதியாக வரும் எலும்பு உருவாக்கத்தில் ஏற்படும் கோளாறு. இக்கோளாறுள்ள குழந்தைகள் எதிலாவது இலேசாக மோதினால்கூட எலும்புகள் முறியும் அபாயம் உள்ளது. இந்த நோய் முறையாகக் கண்டறியப்படாவிட்டால் இக்குழந்தைகளுக்கு ஏற்படும் எலும்பு முறிவிற்கு, அவர்களின் பெற்றோர்கள் குழந்தைகளை அஜாக்கிரதையாகக் கையாண்டதுதான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட நேரிடலாம்.
English
A rare genetic disorder characterized by fragile bones, often resulting in fractures in infants and very young children. When this disorder remains undetected, parents are sometimes wrongfully accused of child abuse.