osteoporosis
எலும்பில் மிகை நுண்துளை, எலும்பு மெலிதல், முதுமை எலும்பு மெலிவுறல், எலும்புத்துளை நோய், எலும்புப்புரை, என்புக்கோறை நோய்
தமிழ் விளக்கம்
எலும்புகளில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைபாட்டால், எலும்புகள் அடர்த்தி குறைந்து, மென்மையாகி, எலும்புகளில் நுண்துளைகள் ஏற்பட்டு, எளிதில் நொறுங்கும் தன்மையுடையதாக மாறும் கோளாறு. இது குறிப்பாக நடுவயதினரையும், வயதான பெண்களையும் அதிகம் பாதிக்கின்றது.
English
A disorder of the bones associated with calcium deficiency and characterized by increasing porosity and brittleness and decreased density in the bone matter. The major at-risk populations are middle-age and older women. See also osteogenesis imperfecta.