outdoor relief
கட்டிடத்திற்கு / நிறுவனத்திற்கு வெளியில் வழங்கப்படும் நிவாரணம்
தமிழ் விளக்கம்
ஆரம்ப காலத்தில் வறியவர்கள், ஆதரவற்றவர்கள், இயலாதவர்களுக்கான உதவி என்பது அவர்களை வறியவர் இல்லங்களில், ஆனாதை இல்லங்களில், வேறு வகையான உறைவிடங்களில் அல்லது பணிக் காப்பகங்களில் (வேலைக் கொட்டடிகளில்) சேர்த்து விடுவது என்ற நடைமுறை பின்பற்றப்பட்டது. நிவாரணம் என்பது நிறுவனமயப்படுத்தப்பட்ட (instituition) இடங்களிலே வழங்கப்பட்டது. 1601 ஆம் ஆண்டு எலிசபத் வறியவர் சட்டம், அமலுக்கு வந்தபின், வறியவர்க்கான உணவு, உடை அல்லது பொருட்கள் இந்த நிபந்தனைகளைத் தளர்த்தி, நிறுவனங்களுக்கு வெளியே உதவி வழங்க வழிசெய்தது.
English
A historical term referring to a form of welfare assistance that occurs outside an almshouse, orphanage, and other residential facilities. Most forms of public assistance are of this type. See also indoor relief.