overcompensation

ஈடுகட்டல்

தமிழ் விளக்கம்

ஆல்பிரட் அட்லர் என்ற மனோதத்துவ நிபுணரால், மனிதர்கள் தங்கள் குறைபாடுகளை, பலஹீனங்களை மறைக்க, அந்த பலஹீனங்களின் எதிர்மறைத் தன்மையை வலிந்து வளர்த்துக் கொள்ளும் ஆளுமைக்கூற்றை விளக்கப் பயன்படுத்திய சொல். மனிதர்கள் கையாளும் பல்வேறுவிதமான உளப்பாதுகாப்பு முறைகளில், ஈடுகட்டல் என்பது ஆரோக்கியமான, மனமுதிர்ச்சி கொண்ட உளப்பதுகாப்பு முறை. மனிதர்கள் தாங்கள் உண்மையாகவோ அல்லது கற்பனையாகவோ கண்டறியும் பலஹீனங்கள், ஏமாற்றங்கள், திறமைக்குறைவு, நிறைவேறாத ஆசைகள் போன்றவற்றால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட, அதற்கு மாறான ஆளுமைக்குணங்களை வலிந்து வளர்த்துக்கொள்ளும் முறையை உளவியல் ஈடுகட்டல் என்கின்றனர். இதில் நேர்மறையான ஈடுகட்டல் முயற்சி, ஆரோக்கியமான மனநிலையையும், எதிர்மறையான ஈடுகட்டல் முயற்சி தாழ்வு மனப்பான்மையையும் வளர்க்கும். மிகையாக ஈடுகட்ட நினைக்கும் உளப்பாங்கு சுயமரியாதையை வளர்க்க உதவினாலும் அளவிற்கு அதிகமானால் அதுவே அதிகார வேட்கையையும், மற்றவர்களை மதிக்காத மனோபாவத்தையும் வளர்த்துவிடும்.

English

A defense mechanism characterized by an individual's extreme efforts to counterbalance a real or imagined deficiency.