overgeneralization

மிகையாகப் பொதுப்படுத்துதல்

தமிழ் விளக்கம்

மிகையாகப் பொதுமைப்படுத்தல் என்பது ஒன்றை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்தாத அரைகுறையான ஆதாரங்களைக் கொண்டு (தரவுகளைக்கொண்டு), ஒரு அனுமானத்திற்கு வருதல் அல்லது தீர்மானத்திற்கு வருதல். இது அறிதலில் / புலனுணர்வில் ஏற்படும் குறைபாடு, போலித் தருக்கவாதம் அல்லது புள்ளிவிவரங்களைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்றவற்றால் ஏற்படுகிறது. மிகையாகப் பொதுமைப்படுத்தல் மனித சிந்தனையில் தாக்கமேற்படுத்தி, ஒருமுறை ஏற்பட்ட அனுபவமே மீண்டும் மீண்டும் ஏற்படும் என்ற மனப்பதட்டத்தை உருவாக்கிவிடும்.

English

The thought or act of forming broad principles from small or limited details. For example, a client says, "My son stayed out late last night. I know he's always going to do that from now on." When an overgeneralization is an unconscious attempt to avoid facing some painful truths, it is considered to be a defense mechanism.