overseers of the poor

ஏழைகளைக் கண்காணிப்பவர்கள்

தமிழ் விளக்கம்

16 வது மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்திலும், காலனிய அமெரிக்காவிலும் ஏழைகளுக்கு உதவப் போடப்பட்ட வரிகளை வசூலிக்கவும், அந்த வரிப்பணத்தை பயன்படுத்தி ஆதரவற்றவர்களுக்கு நிவாரணம் அளிக்கவும், ஊனமற்ற, திடகாத்திரமான வறியவர்களுக்கு வேலை கொட்டடிகளில் (work houses) வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கவும் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர்கள். இவர்கள் ஹென்றியின் காலத்தில் போடப்பட்ட வறியவர் சட்டத்தின்படி (1536) அரசிற்கும், தேவாலய நிர்வாகத்திற்கும் உதவ நியமிக்கப்பட்ட உள்ளூர் அதிகாரிகள். பின் 1782 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்த கில்பேர்ட் சட்டம், வேலையற்றவர்களுக்கும், வீடற்றவர்களுக்கும் வேலைக் கொட்டடிகளில் வேலை வாய்ப்பளிப்பதற்கும், வறியவர் சத்திரங்களில் சேர்த்துவிடுவதற்கும் பதிலாக அவர்கள் வாழும் சமுதாயத்திலே அவர்களுக்குப் பொருத்தமான நிவாரண உதவிகளைச் செய்யும்படி பணிப் பொறுப்பை மாற்றியமைத்தது. ஏழைகள் கண்காணிப்பாளர்கள் என்ற முறையிலிருந்துதான், சமூகப்பணி ஒரு தொழில் முறையாக, கல்வி முறையாக மாறியதாக சமூகநல வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர்.

English

People who in 16th-and 17th-century England and Colonial America were appointed as public officials to help collect local taxes and use these funds to provide relief for the destitute and, primarily, jobs for people who were unemployed and not disabled. Overseers of the poor were established in the Henrician Poor Law of 1536 and served as local officials for the government and for churches. The Gilbert Act of 1782 modified their role, requiring them, whenever possible, to find jobs and housing for the poor population in the community rather than placement in workhouses or alms- houses. Some social welfare historians trace the evolution of the modern social work profession from the overseers of the poor.