oversensitivity

கூருணர்வுத்திறம், கூருணர்ச்சி மென்மை, தொடப்பொறாச் சிடுசிடுப்பு, புறத்தூண்டுதலுக்கு உடனடி எதிர்விளைவு காட்டும் உயிரினத்தின் பண்பு, சுமரணை

தமிழ் விளக்கம்

மற்றவர்கள் செயல்களையும், பாவனைகளையும், உடல்மொழியையும் அளவிற்கதிகமாக உற்று நோக்குவதன் மூலம் அவர்கள் தன்னை நம்புகிறார்களா (ஏற்றுக்கொண்டார்களா) என்று கவலை கொள்ளல், நம்பாதிருந்தால் அவர்கள் நம்பும்படி தற்காப்பு வார்த்தைகளை உபயோகப்படுத்துதல், அல்லது அவர்களிடமிருந்து விலகிக்கொள்ளல் போன்ற நடத்தையின் மூலம் உருவாகும் கவலை, சித்தப்பிரமை (paranoia), மனதிலிருந்து அகற்றமுடியாத, தேவையற்ற, தொடர்ந்து உருவாகும் மனதை அலைக்கழிக்கும் எண்ணங்களால் ஏற்படும் விசனம் (obsessive- compulsive disorder), பசியற்ற உளநோய் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

English

A response pattern of behavior and often a symptom of depression, paranoia, anorexia nervosa, obsessive- compulsive disorder, and many other mental disorders, characterized by heightened awareness of reactions by others, social fragility, embarrassment, and anxiety about perceived disapproval by others and defensive verbalizations or withdrawal in anticipation of rejection by others.