overutilization
மிகை பயன்பாடு, மிதமிஞ்சிய உபயோகம்
தமிழ் விளக்கம்
ஒன்றின் பயன் குறையுமளவிற்கு, நன்மை குறையுமளவிற்கு மிதமிஞ்சிப் பயன்படுத்தல். இது மருத்துவத் துறையில் அதிக பொருட்செலவை உண்டாக்கும் தேவையற்ற பரிசோதனைகளைச் செய்வதும், தேவையற்ற சிகிச்சைகளைச் செய்வதையும் குறிக்கும். இயற்கை வள நிர்வாகத்தில் காடுகளை, படிம எரிபொருட்களை, நிலத்தடி நீரை அது மீட்டுருவாக்கம் பெறமுடியாதபடி அதிகமாக உபயோகிப்பதையும், அதனால் சுற்றுச் சூழல் சீர்கேடடைவதையும் குறிக்கும்.
English
See utilization review.