Ovington, Mary White (1865-1951)
தமிழ் விளக்கம்
மேரி வொயிட் ஓவிங்க்டன் (1865 - 1951) - கறுப்பின மக்கள் முன்னேற்றத்திற்கான தேசியக் கூட்டமைப்பின் ஸ்தாபகராகவும் அதன் தலைவராகவும் நீண்டநாட்கள் பணியாற்றியவர். சமுதாய ஊழியரகப் பணியாளராகத் தன்னுடைய பணியைத் தொடங்கி, தேசிய அளவில் கறுப்பின மக்களுக்கு முனைப்புடன் பணியாற்றியவர். இந்த அமைப்பு கறுப்பின மக்கள் விசாரணையின்றி மரணதண்டனைக்கு உள்ளானதாலும், அவர்கள் மீதான வழக்குகளில் தான்தோன்றித் தனமான தீர்ப்புகள் வழங்கப்பட்டதாலும் அதிருப்தியடைந்த மேரி வொய்ட் ஓவிங்க்டன் என்ற சமூகப்பணியாளராலும் பிற கறுப்பின மற்றும் வெள்ளையர்களின் ஆதரவாலும் கறுப்பின மக்கள் முன்னேற்றத்திற்கான தேசியக் கூட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அமெரிக்காவின் எல்லா மாநிலங்களிலும் செயல்படுகின்ற, 1500 கிளைகளுக்கு மேல் கொண்டுள்ள இந்தக் கூட்டமைப்பு, கறுப்பின மக்களின் உரிமைகளைச் சட்டபூர்வமாக வென்றெடுக்கவும், அரசியல் செயல்பாடுகள் மூலம் எல்லோருக்குமான மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், மனித உரிமைகள் பற்றிய தகவல்கள் தந்துதவுவதிலும், உரிமைகள் பற்றிய கல்வி கொடுப்பதிலும் முனைப்புடன் செயல்படுகிறது.
English
A principal founder and long-time leader of the National Association for the Advancement of Colored People (NAACP). She began as a settlement house worker where she was exposed to the problems facing black people and became active in anti- lynching campaigns. She was the NAACP Board Chair for 10 years.