ovulation

முட்டையிடுதல், அண்டவிடுப்பு, கருமுட்டை வெளிப்படுதல், சூலாக்கம், முட்டை வெளியீடு, முட்டை வெளிப்படும் காலம்

தமிழ் விளக்கம்

கரு முட்டை (Ovum) அல்லது சூல் முட்டை என்பது பெண்ணின் இனப்பெருக்க உயிரணு (Sex cell or Gamete) ஆகும். இது ஆண், பெண் வேறுபாடுள்ள இனங்களில், பெண் உயிரினங்களில் இருக்கும் பால் உயிரணுவாக இருப்பதனால், பெண் பாலணு எனவும் அழைக்கப்படும். சூல் முட்டையானது ஆணின் பாலணுவுடன் (விந்து) இணைந்து, கருவணுவை (Zycote) உருவாக்கும். மனிதரில் பெண்ணின் சூலகத்தில் சூல் முட்டைகள் உருவாகும். மாதத்திற்கு ஒரு முட்டையாக முதிர்ந்து வெளிவரும். இது முட்டைப் பிறப்பு எனப்படுகிறது. உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு முட்டை வெளிப்படும் நிகழ்வை அறிந்து கொள்ளலாம். பெண்ணுருப்பிலிருந்து வரும் திரவம் (Cervical mucus) மிகவும் வழவழப்பாகவும், ஈரமானதாகவும் ஆகி விடும். மார்பகங்கள் மென்மையாக ஆகும். வயிறு சுண்டி இழுப்பது போல இருக்கும் (belly cramps), ரத்தச் சொட்டுக்கறை (spotting), உடலுறவில் நாட்டம் அதிகரிக்கும். முட்டை கருப்பையில் இருந்து வெளி வந்தததும் உடல் வெப்பம் 0.4°F – 0.8°F அதிகமாகும். அக்குள் மற்றும் மார்பின் கீழ்ப்பகுதி தொடைகள் சூடாகும். மாதவிலக்கு ஒழுங்காக சரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை நடந்தால், முட்டை வெளிப்படும் (Ovulation) நாள் சரியாக 14 ஆம் நாள் நடக்கும். மாதவிலக்கு சீராக வரவில்லையென்றால், முட்டை வெளிப்படும் நாள் என்பது, மாத விலக்கு ஆரம்பிக்கும் நாளிலிருந்து சரியாக 14 நாட்கள் முன்னால் நடக்கும். மாதவிலக்கு சுழற்சி 31 நாட்கள் என்றால், முட்டை வெளியீடு நாள் 31- 14 = 17. 17 ஆம் நாள் முட்டை வெளிப்படும்.
இது கருமுட்டைக் குழாய் வழியாக வரும்போது முதிர்ந்து, ஆணின் விந்துவை எதிர்கொள்ளத் தயாராகி ஆணின் விந்தோடு சேர்ந்து கருவணுவை உருவாக்கி, பெண்ணின் கருப்பையில் பதிந்து வளரும். கருவணுவானது முளைய விருத்தி மூலம் முளையமாக விருத்தியடைகிறது. முளையத்திற்குத் தாயிடமிருந்து சூல்வித்தகம் மூலம் ஊட்டம் கிடைக்கிறது. பின்னர் முதிர்கருவாகி, குறிப்பிட்ட கருத்தரிப்பு காலம் நிறைவடைந்ததும், குழந்தையாகப் பிறக்கும். மனித உடலில் உள்ள உயிரணுக்களிலேயே மிகவும் பெரியது சூல் முட்டை ஆகும். இதனை நுண்ணோக்கியின் உதவியின்றி காண இயலும். இது 100 முதல் 200 µm நீளமுள்ளது. இருப்பினும் இவை வெளியில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் ஊர்வன, பறப்பனவினதை விட பல மடங்கு சிறியதாகும். எனவேதான் இவற்றிற்கு கருப்பையில் நீண்ட நாள் வளர்ச்சித் தேவையாக உள்ளது.

English

Release of a female reproductive cell, that is, the ovum or egg, into one of the two fallopian tubes. This takes place in women about 14 days, on the average, after the onset of menstruation.